Easy Ways to a Healthy Life
நோயின்றிவாழ சிறந்த அறிவுரைகள்
இன்றைய காலகட்டத்தில் நாம் நோயின்றி நலமோடு வாழ்வது பெரும் சவாலாகவே அமைகிறது. நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு அகஸ்தியர் அருளிய எளிய வழிமுறைகளை பின்பற்றலாமே.


இன்றைய காலகட்டத்தில் நாம் நோயின்றி நலமோடு வாழ்வது பெரும் சவாலாகவே அமைகிறது. நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு அகஸ்தியர் அருளிய எளிய வழிமுறைகளை பின்பற்றலாமே.
1) விடியற்காலையில் எழுந்திடவேண்டும்

2) காலையில் எழுந்ததும் யோகா பயிற்சி செய்திடவேண்டும்

3) சிறுநீர், மலம் கழித்தலுக்கான உந்துதலை அடக்கக்கூடாது

4) தினம் ஒரு பழமாவது சாப்பிடவேண்டும்


5) நல்ல பசி எடுத்த பின்பே சாப்பிடவேண்டும்

6) கொதிக்கவைத்த தண்ணீர், நீருடன் கலந்த மோர், உருக்கிய நெய் இவற்றையே உண்ணவேண்டும்

7) முதல் நாள் சமைத்த உணவு அமுதாகவே இருந்தாலும் சாப்பிடக்கூடாது


8) இரவில் தயிர் சாப்பிடக்கூடாது

9) சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்கவேண்டும்

10) மாசடைந்த இடங்களில் நடக்கக்கூடாது


11) சாப்பிட்ட உடன் தூங்க கூடாது

12) பகல் பொழுதில் தூங்க கூடாது

13) மாலையில் தினமும் விளையாட வேண்டும்


14) நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்


15) எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இருக்க வேண்டும்

16) பெற்றோர் பெரியோர் ஆசிரியர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்

17) கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் நடந்து கொள்ளணும்

Comments
Post a Comment